₹500 கோடி💰 இழப்பீடு கேட்டு ஜாகிர் நாயக்🙏 நோட்டீஸ்📜

  |   செய்திகள்

ஜூலை 1-ந் தேதி வங்காளதேச தலைநகரான டாக்காவில் தீவிரவாதிகள்☠ நடத்திய பயங்கர தாக்குதலில் இந்திய🇮🇳 மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர்😞. இதில் ஈடுபட்டிருந்த தீவிரவாதி, மும்பையை சேர்ந்த மத போதகர் 🙏ஜாகிர் நாயக்கின் பேச்சை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்😳. எனவே, இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தூண்டுதலாக அவரின் பேச்சு அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது😏. இந்நிலையில், இது தொடர்பாக தன்னிடம் விளக்கம் கேட்டு 🇮🇳இந்திய அதிகாரிகள்👮 யாரும் அணுகவில்லை என்றும், ஒரு போதும் நான் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்ததில்லை என்று குறிப்பிட்டார். இருப்பினும், பிரபல ஆங்கில செய்தி சேனலான ‘டைம்ஸ் நவ்’ நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி👔 என்பவர் தன்னை தொடர்புபடுத்தி, தொடர்ந்து வெறுப்பு பிரசாரம் செய்வதால் அவரிடமிருந்து இழப்பீடாக ₹500 கோடி💰 கேட்டு, ‘டைம்ஸ் நவ்’📰 செய்தி சேனலுக்கும் நோடீஸ்📜 அனுப்பியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬