கலிபோர்னியாவில் 65கிமீ💨 வேகத்தில் பரவி வரும் காட்டுத்தீ🔥

  |   செய்திகள்

சப்பரால் பகுதியில் தற்போது பரவிவரும் தீயை கட்டுக்குள் கொண்டுவர, சுமார் 4000 தீயணைப்பு வீரர்கள் மற்றும் விமானங்கள்✈ ஈடுபட்டு வருகின்றனர்😳. இதில் சுமார் 32000 ஏக்கர் நிலம் பாழடைந்துள்ளது. மணிக்கு 65 கிமீ வேகத்தில காட்டுத்தீ🔥 பரவி வருவதால் தீயை கட்டுப்படுத்தும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் பிக் சூர் கடலோரப் பகுதி மற்றும் சான்டா கிளாரிடா சமவெளியை சேர்ந்த சுமார் 1500 வீடுகளில்🏠 வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தின் முக்கிய நெடுஞ்சாலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் தீயினால் 50க்கும் அதிகமான 🏠வீடுகள் நாசமடைந்தன. கனரக வாகனம்🚚 ஒன்று திடீரென கவிழ்ந்து விழுந்ததால் அந்த வாகனத்தின் டிரைவர் உயிரிழந்தார்😞. லாஸ் ஏஞ்சலஸ் மலைப்பகுதியில் கடந்த வாரம் காட்டுத்தீ சுமார் 40000 ஏக்கர் நிலத்தை பாழ்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬