🛏படுத்து கொண்டு ஆவடி கவுன்சிலர் போராட்டம்😳

  |   செய்திகள்

நேற்று, ஆவடி நகராட்சி 8⃣வது வார்டு புரட்சி பாரதம் கட்சி கவுன்சிலர் முல்லை பலராமன், நகராட்சி அலுவலக வாசலில் பாயில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது கையில், “ஆவடி பெரு நகராட்சி 8⃣வது வார்டுக்கு உட்பட்ட டாக்டர் அம்பேத்கர் நகருக்கு குடிநீர் கொடுக்காத அதிகாரிகளை கண்டித்து போராட்டம்” என்று எழுதிய போர்டை கையில் வைத்து இருந்தார். பின் நகராட்சி தலைவர் கலை மா.சேகர், ஆணையாளர் மதிவாணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் அந்த பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று கவுன்சிலர் முல்லை பலராமன் போராட்டத்தை கைவிட்டார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬