🇮🇳இந்தியா அணியின் விறுவிறுப்பான பயிற்சி 👍

  |   கிரிக்கெட்

புதிய பயிற்சியாளருடன், மேற்கிந்திய தீவுகளில் நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடரில் 🇮🇳இந்திய பங்கேற்கிறது. இன்றைய பயிற்சியில் ஒவ்வொரு பேட்ஸ்மென்னும் அரைமணி நேரம் 3⃣ வேகப்பந்து வீச்சாளர்களுடனும். அடுத்த அரைமணிநேரம் 3⃣ சுழற்ப்பந்து வீச்சாளர்களுடனும் விளையாடினார். இதில் முதலில் விஜய் மற்றும் தவான் ஆகியோர் முதல் அரைமணி நேரம் உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், இஷாந்த் ஷர்மா ஆகியோருடன் விளையாடினர். பின்னர் அமித் ஷர்மா, அஸ்வின், ஜடேஜா ஆகியோருடன் விளையாடினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கும்பிளே🔈, " பயிற்சியாளராக, அணியின் வெற்றிக்காக நான் போராடுகிறேன். வீரர்கள் எல்லா விதமான சூழல்களிலும் போராட, அவர்களை தயார்படுத்துவேன்" என்று கூறினார். மேலும் அவர், "அஸ்வின் வலது கையில் ஏற்பட்ட காயம் பெரியதல்ல😃. எனவே அவர் போட்டியில் பங்கேற்பார்" என்று கூறியுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/BZA2nm