இலங்கையில் 🎣மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமம்👍

  |   செய்திகள்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் நுழைவதால் அந்நாட்டு கடற்படை🌊 மற்றும் மீன்வர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி, கைது செய்யப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பிரச்சினையை தீர்க்க இரு நாட்டு அரசுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை💬 நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதத்தில், 🇮🇳இந்திய மீனவர்கள் சிலருக்கு இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு உரிமம் வழங்க, அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து இன்னும் இறுதியான முடிவு எடுக்கவில்லை. இந்திய மீனவர்களுக்கு உரிமம் வழங்கும் திட்டம் 🇮🇳இந்திய தரப்பிலிருந்தே கூறப்பட்டது என்றும் இலங்கை மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬