💳கிரெடிட் கார்டிலும் 🎥'கபாலி'

  |   Kollywood

ஆகாயத்தில் பறக்கும் விமானத்தில்✈ நடிகர் 🌟ரஜினிகாந்த் 🎥'கபாலி' உருவத்தை பதித்ததை தொடர்ந்து தற்போது 👕சட்டைப்பையில் இருக்கும் 💳கிரெடிட்கார்டுகளிலும் கபாலி உருவம் தான். சிட்டி பேங்க் வங்கி கபாலி உருவத்தை அவர்களின் கிரெடிட் கார்டு அட்டைகளில் பதித்து 🌟சூப்பர் ஸ்டாரை கவுரவித்துள்ளது. பா.ரஞ்சித் 🎬இயக்கத்தில், 🌟ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 🎥'கபாலி' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. 'கபாலி' படத்தின் விளம்பர தூதரகர்களாக ஏர் ஏசியா, கேட்பரி, அமேசான், விஎஸ் ஹாஸ்பிடல்ஸ், ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் கபாலி விளம்பர தூதர்களாக மாறியுள்ள நிலையில் தற்போது சிட்டி பேங்கும் 'கபாலி' விளம்பரத்தில் ஈடுபட்டுள்ளது. சிட்டி பேங்க் நிறுவனம் 🎥'கபாலி' கிரெடிட் கார்டுகளை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கிரெடிட் கார்டுகளிலும் 🌟ரஜினி வலம் வருவார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬