122 ரன்னில் அபார வெற்றி🎉 பெற்றது இங்கிலாந்து👏

  |   கிரிக்கெட்

இங்கிலாந்து- இலங்கை இடையே நடந்த கடைசி மற்றும் 5⃣வது ஒரு நாள் போட்டியில், 122ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி இலங்கைய வீழ்த்தியது👏. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ்(51), ஜோ ரூட்(93), ஜோஸ் பட்லர்(70) ஆகியோரின் அபார ஆட்டத்தால், 50 ஓவரின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் எடுத்தது👍. இலங்கை அணியின் பந்துவீச்சாளர் தனுஸ்கா குணாதிலகா 3⃣ விக்கெட்களை கைப்பற்றி அபாரமாக பந்து வீசினார். இந்நிலையில் 325 எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில், தனுஸ்கா குணாதிலகா(48) மற்றும் தினேஷ் சந்திமால்(53) ஆகியோர் மட்டுமே சிறப்பாக ஆடினார்👍. இங்கிலாந்து அணியை சேர்ந்த டேவிட் வில்லி(4 விக்கெட்), லியாம் பிளங்கெட்(3 விக்கெட்), அடில் ரஷீத்(2 விக்கெட்) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 42.4 ஓவரில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது இலங்கை அணி.

📜 ஸ்கோர்கார்ட் - *159
⭐ ஆட்டநாயகன் : ஜோஸ் பட்லர்
🌟 தொடர்நாயகன் : ஜேசன் ராய்

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬