👓ஐன்ஸ்டீனுக்கு இணையான IQ பெற்ற 11 வயது அகிலேஷ்👏

  |   செய்திகள்

நாக்பூரை சேர்ந்த 11 வயது 👦அகிலேஷ் சந்தோர்கர் ஜூன் மாதம் கோடைவிடுமுறைக்காக ஸ்காட்லாந்து சென்றார். அங்கு மனிதர்களின் நுண்ணறிவு திறனை(IQ) கண்டறியும் அமைப்பான 'மென்சா' நடத்திய தேர்வில்✍ கலந்துகொண்டார். இந்நிலையில் தற்போது, மென்சா அமைப்பில் இருந்து அகிலேஷ் குடும்பத்தாருக்கு ஒரு கடிதம்📜 வந்தது. அதில் அகிலேஷின் IQ அளவு 160 உள்ளதாக குறிப்பிடப்பட்டதை கண்ட அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் கொடுத்தது😃. மனிதனின் சராசரியான IQ அளவு 85ல் இருந்து 115 வரை இருக்கும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோருக்கு இணையாக நுண்ணறிவுத்திறன் கொண்டுள்ளார் அகிலேஷ். இவர் உலகின் 2⃣ % அறிவார்ந்த மக்களில் முதல் 🔟 பேரில் ஒருவராக இணைந்துள்ளார். எதிர்காலத்தில் வானியலாளராக விரும்பும் இவர், தற்போது நட்சத்திர கருந்துளை பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வருகிறாராம்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬