காதலியை♥ கொன்ற வழக்கில் பிஸ்டோரியசுக்கு 6⃣ ஆண்டு ⛓சிறை😳

  |   செய்திகள்

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓட்டப்பந்தய வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ்(29), கடந்த 2013ம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது காதலி♥ ரீவா ஸ்டீன்கம்ப்பை துப்பாக்கியால்🔫 சுட்டுக் கொன்றார். இந்த வழக்கில் அவருக்கு 5⃣ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருடமாக சிறையில் இருந்த அவர் பரோலில் வெளியே வந்து தண்டனையை குறைக்க தென் ஆப்பிரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிஸ்டோரியஸ் குற்றவாளி என்றும், அவரின் தண்டனையை உயர்த்தி வழங்கும்படி கீழ்கோர்ட்டுக்கு⚖ உத்தரவிட்டனர். இதையடுத்து கீழ்கோர்ட்டில் பிஸ்டோரியசுக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பான வாதம் ஜூன் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்றது. அப்போது, பிஸ்டோரியஸ் மனநிலை😕 பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், சிறையில் இருந்தால் அவரது நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது, அதில் அவருக்கு 6⃣ ஆண்டு சிறை⛓ தண்டனை வழங்ப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬