நடிகர் சங்கத்திற்காக 'விஷால் - கார்த்தி'யின் புது படம்🎥

  |   Kollywood

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் அரங்கம், கல்யாண💍 மண்டபம், பிரிவியூ தியேட்டர், கருத்தரங்க கூடம், உடற்பயிற்சி🏋 கூடம், நடன பயிற்சி💃 கூடம், சங்க அலுவலகம்🏢 போன்றவை 🏗 அமைக்கப்படும் என்று நாசர் தலைமையில் உள்ள குழு அறிவித்தது. இதற்காக ₹29 கோடி செலவாகும்💰 என்று மதிப்பிடப்பட்டது. ⭐நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ₹9 கோடி நிதி💰 திரட்டினார்கள். மீதி தொகையை💰 சம்பளம் வாங்காமல் படம் நடித்து அதன் மூலம் திரட்ட முடிவு செய்யப்பட்டது. தற்போது நடிகர் சங்கத்துக்கான படம் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. 2⃣ படங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் படத்தில் ⭐விஷாலும், ⭐ கார்த்தியும் இணைந்து நடிக்கிறார்கள். இரண்டாவது படத்தில் ⭐ஜெயம்ரவியும், ⭐ஆர்யாவும் நடிக்கின்றனர். இந்த படத்தில் வழங்கப்படும் சம்பள தொகை நடிகர் சங்க கட்டிட நிதியில் சேர்க்கப்படும். அத்துடன் படம் திரைக்கு வந்த பிறகு லாபத்தில் ஒரு பங்கும் கிடைக்கும். இந்த படங்களின் மூலமாக மட்டும் நடிகர் சங்கத்துக்கு ₹25 கோடி வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பை 2⃣ மாதங்களில் முடித்து விட்டு இந்த வருடம் இறுதியில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். ⭐ஜெயம் ரவி, ⭐ஆர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்கும் என்று தெரிகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬