⭐சவுரவ் கங்கூலியின் 'ஆல் டைம் XI' அணி👍

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர், 🌏உலகளவில் சிறந்த வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டு சிறந்த XI பேர் கொண்ட குழுவினை, 'ஆல் டைம் XI' என்று அறிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது ⭐சவுரவ் கங்கூலியும் சிறந்த XI பேர் கொண்ட அணியின் பட்டியலை வெளியிட்டார். இந்நிலையில் ⭐கங்குலியின் சிறந்த XI பேர் கொண்ட அணியில் 2⃣ இந்திய வீரர்களுடன், 4⃣ ஆஸ்திரேலிய வீரர்களும், 2⃣ இலங்கை வீரர்களும், 2⃣ தென் ஆப்பிரிக்கா வீரர்களும், 1⃣ இங்கிலாந்து வீரரும் இடம்பெற்றுள்ளனர். 😎தோனி மற்றும் ⭐கோலி, ⭐சவுரவ் கங்கூலியின் அணியில் இடம் பெறவில்லை. மேலும் அவரது அணி கேப்டனாக ⭐ரிக்கி பாண்டிங்கும், விக்கெட் கீப்பராக ⭐சங்ககாராவும் இடம் பெறுவர் என்று குறிப்பிட்டார்.

⭐கங்கூலியின் XI பேர் கொண்ட குழு இதோ:

அலீஸ்டர் குக்(இங்கிலாந்து), மேத்யூ ஹெய்டன்(ஆஸ்திரேலியா), ராகுல் டிராவிட்(இந்தியா), சச்சின் டெண்டுல்கர்(இந்தியா), ஜாக் காலிஸ்(தென் ஆப்பிரிக்கா ), குமார் சங்கக்கார(இலங்கை), ரிக்கி பாண்டிங்(ஆஸ்திரேலியா) , கிளென் மெக்ராத்(ஆஸ்திரேலியா), டேல் ஸ்டெயின் (தென் ஆப்பிரிக்கா) , ஷேன் வார்ன்(ஆஸ்திரேலியா) மற்றும் முத்தையா முரளிதரன்(இலங்கை)

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬