✈ஏர் இந்தியா ₹ 225 கோடி ஊழல் 💰

  |   செய்திகள் / Kollywood

2011–ம் ஆண்டு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் வாங்கியதில், ✈ஏர் இந்தியா விமான நிறுவனம் ₹225 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சி.பி.ஐ. பரிசீலனை செய்ததில், வழக்குபதிவு செய்வதற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பதாக கண்டறிந்தது. எனவே ✈ஏர் இந்தியா, ஜெர்மனி நிறுவனமான எஸ்ஏபி ஏஜி மற்றும் சர்வதேச நிறுவனமான ஐ.பி.எம். ஆகியவற்றின் பெயர் குறிப்பிடாத அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது. ‘‘மத்திய கண்காணிப்பு ஆணையம் செய்த சிபாரிசை ஆராய்ந்தபோது, ✈ஏர் இந்தியாவுக்கு சாப்ட்வேர் வாங்கியதில் பணம் செலுத்தியதில், சேவைகள் வழங்கியதில் பலமுறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்தது. எனவே வழக்கு பதிவு செய்துள்ளோம்’’ என்று சிபிஐ தெரிவித்தது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬