👮கிரண்பேடிக்கு பதிலடி கொடுத்த ⭐ஆர்.ஜே.பாலாஜி 👍

  |   செய்திகள் / Kollywood

சென்னையில் நடந்த 📰இந்தியா டுடே கான்கிளவ் ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதம் நடந்தது. இதில் புதுச்சேரி துணை நிலை ஆளுனர் 👮கிரண் பேடி, 💃குஷ்பு, சுஹாசினி, ⭐ ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய கிரண்பேடி, “ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன. எனவே சுப்ரீம் கோர்ட்டு தடை செய்தது சரிதான்” என்றார். இதற்கு பதில் அளித்த ஆர்.ஜே. பாலாஜி,” நான் குஜராத் சென்றிருந்தேன். அங்கு ஒட்டகங்கள் மீது கடுமையான சுமைகள், மூட்டைகள் ஏற்றப்படுகின்றன. அது சித்ரவதை இல்லையா? என்று கேள்வி தொடுத்தார். அதற்கு கிரண்பேடி, “ கோர்ட்டு தீர்ப்பை மதிக்க வேண்டும்” என்றார். உடனே குறுக்கிட்ட ஆர்.ஜே.பாலாஜி, “சரி. நாங்கள் தீர்ப்பை மதிக்கிறோம். தமிழகத்துக்கு தண்ணீர் தரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஒரு மாநிலம் இந்த உத்தரவை ஏற்க மறுக்கிறது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்” என்றார். கிரண்பேடி பதில் சொல்ல முடியாமல் கீழே பார்க்க, ஆர்.ஜே.பாலாஜி தொடர்ந்தார். “உங்கள் காலில் நீங்கள் அணிந்திருக்கும் செருப்பு தோல் எதில் இருந்து வந்தது. மாட்டை அறுத்து அதன் தோலை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை முதலில் தடைசெய்யுங்கள்... அது சித்ரவதை இல்லையா? என்றார். ஆர்.ஜே. பாலாஜியின் நியாயமான கேள்வியால் கிறங்கிப் போனார் கிரண்பேடி

📲 Get கோலிவுட் on Whatsapp 💬