💃திரிஷாவுக்கு எதிராக திடீர் போராட்டமா😱

  |   செய்திகள் / Kollywood

🎬சுந்தர் இயக்கத்தில் கர்ஜனை என்ற படத்தில் 💃திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், ⭐அமித்பார்க்கவ், கிருஷ்ணவம்சி, வடிக்கரசி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 🗓ஜனவரி 6–ந் தேதியில் இருந்து காரைக்குடி அருகே உள்ள நேமத்தான்பட்டியில் நடந்து வருகிறது. காரைக்குடி மக்கள் மன்றத்தினர், நாம் தமிழர் கட்சியினர், ஆம் ஆத்மி கட்சியினர், தமிழர் தேசிய முன்னணியினர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என 50–க்கும் மேற்பட்டவர்கள் நேமத்தான்பட்டியில் படப்பிடிப்பு நடந்து வரும் பகுதியில் திரண்டனர். பீட்டா அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் திரிஷாவே தமிழகத்தை விட்டு வெளியேறு என்று கோ‌ஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 💃திரிஷாவுக்கு எதிராக படப்பிடிப்பு பகுதியில் சுமார் 2⃣ மணி நேரத்திற்கும் மேல் போராட்டம் நடைபெற்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬