சசிகலா: 🔈 எம்.எல்.ஏக்களை சிறை⛓ வைக்கப்படவில்லை‼

  |   செய்திகள் / Kollywood

கூவத்துார் கோல்டன் பே ரிசார்ட்டில்📰 தங்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கலை சந்திக்கச்சென்ற பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்🚫, அனைவரும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்✊ நடத்தினர். பின்னர் அனுமதி பெற்று, அ.தி.மு.க பொதுச்செயலர் சசிகலாவை சந்தித்தனர்.

அப்போது சசிகலா கூறியதாவது🔈: "அதிமுக எம்.எல்.ஏக்கள் யாரும் சிறை வைக்கப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். எம்.எல்.ஏ.க்களின் சிறு குழந்தைகளை கடத்துவோம் என மிரட்டல் விடுக்கின்றனர். எம்.எல்.ஏக்கள் தொடர்பாக பொய் செய்திகள் பரப்புவது யார் என்பது எங்களுக்குத் தெரியும். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள். சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்போது வரட்டும். வருவதற்கு முன்னரே ஏன் பேசவேண்டும்." இவ்வாறு சசிகலா கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬