ரூ.5 லட்சத்திற்கு💰 மேல் டெபாசிட் செய்தால் அபராதம் - சிபிடிடி

  |   செய்திகள் / Kollywood

கடந்த வருடம் நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, 5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய நேரடி வரிவிதிப்பு கழகம் (சிபிடிடி) முடிவு செய்துள்ளது. ருபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பிற்கு பிறகு நாடு முழுவதிலும் உள்ள சுமார் 18 லட்சம் பேர் ரூ.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி, அந்த அறிவிப்பிற்கு பிறகு வங்கி கடன் போன்றவற்றை மொத்தமாக செலுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கி அதிகாரிகள் கேட்டு கொண்டதை அடுத்து வங்கி கடனை ரொக்கமாக செலுத்தியவர்களுக்கு, 100 சதவிகிதம் அபராதம் விதிக்க முடிவு செய்ய பட்டு உள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬