⭐தனுஷை குறை கூறும் சுசித்ரா 🎤

  |   செய்திகள் / Kollywood

பின்னணி பாடகியான 🎤சுசித்ரா, கடந்த பிப்ரவரி 20-ந் தேதி இவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் காயம்பட்ட தனது கையின் புகைப்படத்தை📷 பதிவு செய்து, ‘இது ⭐தனுஷ் கூட்டத்தின் மோசமான ஆட்களால் ஆன காயம். மன்னியுங்கள்🙏. நீங்கள் தகுதி இழந்துவிட்டீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். சுசித்ராவின் இந்த டுவிட் பலரது மத்தியிலும் பெரும் கேள்விகளை எழுப்பியது. மேலும் அவர், அடுத்த டுவிட்டில், ‘இது சுசிதான், நான் மீண்டும் வந்துவிட்டேன். நான் பாதுகாப்பாக உள்ளேன். ⭐தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டை பற்றி அனைவரிடமும் கூற தயாராக உள்ளேன்’ என்று குறிப்பிட்டார். இன்னும் சில டுவிட்டில் ⭐தனுஷை பற்றி புகழ்ந்தும் கூறியுள்ளார். அதாவது ‘தனுஷ் நீங்கள் கடவுள். உங்கள் காலை காட்டுங்கள் என்று கூறியிருக்கிறார். மேலும், ’⭐தனுஷ் என்னிடமிருந்து தள்ளியே இருங்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬