திருச்சி உண்ணாவிரதத்தில் ஸ்டாலின் பேச்சு 🔈

  |   செய்திகள் / Kollywood

சட்டசபையில் கடந்த 18-ந் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது சபைக்காவலர்கள் நடத்திய தாக்குதலில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டை👕 கிழிந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின்கூறியதாவது 🔈, " திமுகவின் சுயநலத்திற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவில்லை. பல்வேறு கட்சியினர் இந்த போராட்டத்தில் பங்கேற்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் நடக்கும் பினாமி ஆட்சியை அகற்ற வேண்டும். ஜெயலலிதா முதல்வராக இருக்க வேண்டும் என்பதற்காக தான் மக்கள் வாக்களித்தனர். மறைந்த தலைவரை பற்றி விமர்சனம் செய்வது அரசியல் நாகரீகம் அல்ல. மருத்துவர் குழு அளித்த பேட்டியில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது அரசு சார்பில் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. " இவ்வாறு அவர் 🔈 பேசினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬