'தமிழக சிறைக்கு சசிகலாவை மாற்றமுடியாது' 🔈 ஆச்சார்ய 😳

  |   செய்திகள் / Kollywood

சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டுமென சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். கடந்த 15-ம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் 4⃣ ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு சசிகலா கேட்ட எந்த வசதியும் சிறையில் அவருக்கு வழங்கவில்லை. எனவே, அவரை தமிழக சிறைக்கு மாற்ற அவரது தரப்பில் ஒரு விண்ணப்பத்தை முன்வைத்தனர். ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் இல்லை எனவும், அரசியல் காரணங்களால் கர்நாடகாவிற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை உச்ச நீதி மன்ற அனுமதி பெற்ற பின் மட்டுமே, சிறை மாற்றம் செய்ய முடியும் எனவும் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போது சசிகலாவை சிறை மாற்றம் செய்தால் அவர் தண்டனையை ஒழுங்காக அனுபவிப்பாரா என்ற சந்தேகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬