"பாகுபலி - 2" ட்ரைலர் எப்போது....???

  |   Kollywood

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ராணா ரகுபதி, அனுஷ்கா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் பாகுபலி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் வேலையில், நேற்று சிவராத்திரியை முன்னிட்டு இப்படத்தின் முதல் போஸ்ட்டர்களையும், மோஷன் போஸ்டர்களையும் வெளியிட்டார்கள். இவற்றை வெளியிட்ட 24 மணிநேரத்திற்குள்ளாகவே 10 லட்சம் பார்வைகளை பெற்று உள்ளது. மேலும் இப்படத்தின் ட்ரைலர் வெளியிடுவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன எனவும், கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தினால் ட்ரைலர் வெளியிடும் தேதியை அறிவிக்க முடியவில்லை எனவும் இப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி தெரிவித்து உள்ளார். அதிவிரைவில் அறிவிப்பு வரும் எனவும் கூறினார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬