'🏫பள்ளி வாகனங்களில்🚌 'சிசிடிவி' கட்டாயம்' : சி.பி.எஸ்.இ 😳

  |   செய்திகள்

கடந்த மாதம், உ.பி., மாநிலம் எடா எனும் இடத்தில், பள்ளி மாணவர்கள் சென்ற பஸ் 🚌 விபத்துக்குள்ளானதில், டிரைவர் உட்பட, 12 பேர் பலியாகினர்; 35 பேர் படுகாயம் அடைந்தனர்😱. இது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, 🏫பள்ளி வாகனங்களில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து வரையறுக்க, அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் உத்தரவிட்டார். மத்திய அமைச்சகத்தின் உத்தரவை அடுத்து, சி.பி.எஸ்.இ., இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. கீழ்கண்டவற்றில், ஏதேனும் ஒரு விஷயத்தில் குறை ஏற்பட்டாலும், அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளின் விவரம் இதோ :

🔰அனைத்து 🏫பள்ளி வாகனங்களிலும், பாதுகாப்பான வகையில் ஜன்னல்கள் அமைந்திருக்க வேண்டும்.

🔰 பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில்🚌, வேகக் கட்டுப்பாடு கருவி கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மணிக்கு, 40 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்லாத வகையில் பொருத்தியிருக்க வேண்டும்.

🔰 'சிசிடிவி' எனப்படும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

🔰 வாகனம் எங்கு செல்கிறது என்பதை அறியும் வகையில், அதில், ஜி.பி.எஸ்., கருவி இடம் பெற்றிருக்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளை வாகனத்தில் சரியாக ஏற்றி, இறக்க, ஒரு பெண்👩 உதவியாளர் பணியமர்த்தப்பட வேண்டும்.

🔰 வாகனத்தின் டிரைவரின் நன்னடத்தை குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும்

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬