அருண் ஜெட்லியை தமிழக விவசாயிங்கள் சந்தித்தனர் 👍

  |   செய்திகள்

டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் நேற்று மத்திய நிதி💰 மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் வங்கியில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அப்போது துணை சபாநாயகர் தம்பிதுரை, அ.தி.மு.க. எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், வேணுகோபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சந்திப்புக்கு பிறகு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது 🔈, " மத்திய நிதி மந்திரியை நாங்கள் சந்தித்து தமிழகத்தில் நிலவும் வறட்சி நிலவரத்தை எடுத்து கூறினோம். வறட்சியால் 400 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி, விவசாயிகள் பெற்ற வங்கி கடன்களை தள்ளுபடி செய்யுமாறு வலியுறுத்தினோம். தள்ளுபடி செய்தால்தான் விவசாயிகளை காப்பாற்ற முடியும் என்றும் கூறினோம். இதை கவனமாக கேட்ட நிதி மந்திரி, 2⃣ நாளில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை அழைத்து இது தொடர்பாக பேசி முடிவு தெரிவிப்பதாக கூறினார். அந்த முடிவு தெரியும்வரை இங்குதான் இருப்போம்." என்று அவர் கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬