🌱இரட்டை இலை சின்னம் யாருக்கு ❓

  |   செய்திகள்

இரட்டை இலை எந்த அணிக்கு கிடைக்கும் என நாளை தெரியும். ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு 🗓 ஏப்ரல் 12–ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். இன்று காலை தேர்தல் ஆணையத்தில் ஆணையர் நஜீம் சைதி முன்னையில் 🌱இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விசாரணை தொடங்கியது. சசிகலா அணி சார்பில் காங்கிரசை சேர்ந்த வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் வாதம், மோகன் பராசரன், அரிமா சுந்தரம் ஆகியோர் வாதிட்டனர். ஓபிஎஸ் அணி சார்பில் மனோஜ்பாண்டியன், குருகிருஷ்ண குமார், வைத்திய நாதன் ஆகியோர் வாதிட்டனர். இந்த விசாரணையில் இருதரப்பு ஆதரவு எம்.பிக்களும் கலந்து கொண்டு விவாதித்தனர். இந்நிலையில் இந்த விவாத்திற்கான முடிவு நாளை தெரியும்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬