கடலாடி அரசு 🏥மருத்துவமனையில் 🔒பூட்டு போடும் போராட்டம்😳

  |   செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இதில் நிரந்தர மருத்துவர்கள் இல்லாததை கண்டித்து பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட வர்த்தக சங்கத்தினர் 247 பேரை 👮போலீஸார் கைது செய்தனர். 6⃣ மருத்துவர்கள் பணிபுரியக்கூடிய மருத்துவமனையில்🏥 நிரந்தர மருத்துவர்கள் இன்றி, தற்காலிக மருத்துவர் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். மேலும் கடந்த 15 ஆண்டுகளாக அங்கு அடிப்படைத் தேவைகளான தண்ணீர்💧, கழிப்பறை வசதி🚽, இரவில் ⚡மின்சார வசதி, 108 ஆம்புலன்ஸ்🚑 வசதி உள்ளிட்டவைகள் இன்றி நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்பிரச்சினையை தீர்க்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளது. இந்நிலையில், கடலாடி வர்த்தக சங்கத்தினர் ஒரு நாள் அடையாள கடை அடைப்பும், அரசு மருத்துவமனைக்கு பூட்டு போடும் போராட்டத்தையும் நேற்று நடத்தினர். பின்னர் கடலாடி சாயல்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அச்சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மருத்துவமனையை பூட்டுப்போட புறப்பட்டவர்களை 👮போலீஸார் தடுத்து நிறுத்தி 148 பெண்கள் உள்ளிட்ட 247 பேரைக் கைது செய்தனர். முன்னதாக மருத்துவ துணை இயக்குநர் முனியரசு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விரைவில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬