சவுதியில் கப்பல்🚢 மோதியதில் 3⃣ தமிழக மீனவர்கள் பலி😢

  |   செய்திகள்

சவூதி அரேபியாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக 🐟மீனவர்களின் விசைப்படகுகள் மீது வெளிநாட்டுக் கப்பல்🚢 மோதியதில் படகு நொறுங்கியதும் நாகர்கோவிலைச் சேர்ந்த 3⃣ மீனவர்கள் பலியாகியுள்ளனர். நாகர்கோவிலை அடுத்த கேசவன்புத்தந்துரை மற்றும் ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த ஜார்ஜ், ஜோசப் சுகந்தன், நெவில் ஆகிய 3⃣ பேரும் சவூதி அரேபியாவில் தரின் என்ற இடத்தில் விசைப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெளிநாட்டுக் கப்பல் ஒன்று இவர்களது விசைப்படகு மீது மோதியது. இதில் படகு நொறுங்கியதுடன் 3⃣ பேரும் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்த மீனவர்களை மீட்டுத் தாருங்கள் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசும், மத்திய அரசும் மீனவர்களின் உடலை உடனடியாக தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬