தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம்💰 கிடைக்குமா 😱

  |   செய்திகள்

பருவ மழை தவறியதால் இந்த நிதியாண்டில் பல மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ஜார்க்கண்ட், பிகார், ஹரியாணா, சத்தீஸ்கர் ஆகிய 10 மாநிலங்களளின் தலைமை செயலார்களுக்கு, உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 26ம் தேதிக்குள் வறட்சி நிலவரம் குறித்து அறிக்கை தர உத்தரவிட்டுள்ளது. 'ஸ்வராஜ் அபியான்' எனும் அமைப்பு தொடர்ந்த பொதுநல வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய தெரிவித்தது.

இது தமிழர்ளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து, டெல்லியில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி குறித்து மத்திய குழுக்கள் கடந்த 🗓ஜனவரி மாதம் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஆய்வு செய்தது. இதன் அடிப்படையில் மத்திய குழு தமிழகத்திற்கு வறட்சி நிவராணமாக ரூ.2096.80 கோடி💰 வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், ரூ.1748.28 கோடி💰 வழங்க துணைக்கமிட்டி உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யுள்ளது. இந்த 2⃣ குழுக்களின் பரிந்துரை குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்ராத் சிங் தலைமையில் நாளை நடைபெறும் உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, விவசாய துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

தமிழக அரசு வறட்சி நிவராணமாக ரூ.39656 கோடி கேட்டுள்ள நிலையில் மத்திய குழுவினரின் பரிந்துரை மிகவும் சொற்பம் என்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்😱. தமிழத்திற்கு வறட்சி நிவராணமாக எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது குறித்து நாளை நடைபெற இருக்கு உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு தான் தெரியவரும் 🙏.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬