நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் 👮அதிகாரிகள் பற்றாக்குறை 😱

  |   செய்திகள்

மக்களவையில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அளித்து உள்ள அறிக்கையில், நாடு முழுவதும் மொத்த ஐஏஎஸ் இடங்களின் எண்ணிக்கை 6,396 ஆகும். ஆனால் இப்போது 4,926 அதிகாரிகளே பணியில் உள்ளனர். அதிலும், பீகாரில் 128 இடங்கள், உத்தரபிரதேச மாநிலத்தில் 117, மேற்கு வங்காளத்தில் 101 இடங்கள் காலியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இதேபோன்று நாட்டில் மொத்த ஐபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 4,802 ஆகும். ஆனால் இப்போது பணியில் இருப்பது 3,894 ஐபிஎஸ் அதிகாரிகளே. உத்தபிரதேசம் மாநிலத்தில் 114 காலி இடங்களும், மேற்கு வங்காளத்தில் 88 காலி இடங்களும், ஒடிசாவில் 79 காலி இடங்களும், கர்நாடகாவில் 72 இடங்களும் காலியாக உள்ளனர். பீகாரில் ஐ.பி.எஸ். பணிக்கான மொத்த இடங்கள் 231-ல் 43 இடங்கள் காலியாக உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று இந்திய வனத்துறைக்கான(ஐ.எப்.எஸ்) பணியிடங்களில் 560 காலி இடங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐ.எப்.எஸ். பணிக்கான மொத்த பணி இடங்கள் 3,157ல் இப்போது 2,597 அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். பணிக்கான காலி இடங்கள் மராட்டியத்தில் 46 காலி இடமும், மத்திய பிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் 45 காலி இடங்களும் உள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬