புது இயக்கத்தை இயக்கப்போகும்🎬 இயக்குனர் - யார்⁉

  |   Kollywood

நமது தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு சமூக பிரெச்சனைகளில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள் நமது சினிமா பிரபலங்கள்👍. லாரென்ஸ், ஹிப் ஹாப் தமிழன் ஆதி, ஆரி, ஜி.வி., இந்த வரிசையில் தற்போது இயக்குனர் 🎬தங்கர் பட்சானும் சேர்ந்துள்ளார்😯. இயக்குனரும் நடிகருமான தங்கர் பச்சான் ஒரு புது இயக்கத்தை தொடங்க போவதாக அறிக்கை விடுத்துள்ளார்🔈. இதுகுறித்து அவர் கூறியிருப்பது என்னவென்றால்🎙, 'தமிழ் தான் என்னை நல்ல மனிதனாக உருவாக்கி உள்ளது👍. குடும்பத்தை பற்றி மற்றும் யோசிக்காமல் மக்களின் நலன் குறித்தும்🤔யோசித்து என்னால் முடிந்த வரை போராடவும் வைத்துள்ளது😯. நெடுநாளாகவே எனது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் என்னை ஒரு இயக்கத்தை இயக்க சொல்லி வற்புறுத்தி வந்தார்கள்😳. தற்போது தான் அதற்கான நேரம் அமைந்துள்ளது😍. தமிழ் மக்களை சூறையாடியவர்களை விட சூறையாட காத்திருப்பவர்கள் தான் தற்போது அதிக அளவில் உள்ளனர்👌. இந்த சூழலை மாற்ற வரும் தேர்தலில்🗳 வாக்களிக்கும் மக்களை சரியான முறையில் வழிநடத்தி செல்ல ஒரு இயக்கம் தேவை படுகிறது👍. அதற்கான இயக்கம் தான் இது👏. இளைய தலைமுறைக்கான இயக்கம் இது. சமூக நலங்களின் மீது அக்கறை இருக்கும் அனைத்து இளைஞர்களையும் ஒன்று திரட்ட போகிறேன்'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬