வங்கி ஏ.டி.எம்மில் ஒரு பக்கம் அச்சிடப்படாத 500 ரூபாய் நோட்டு 😱

  |   செய்திகள்

குஜராத் மாநிலம் ஜாம்நகர், வங்கி ஏ.டி.எம். மையத்தில் ஒரு பக்கம் அச்சிடப்படாத 500 ரூபாய் நோட்டு ஏ.டி.எம். மையத்தில் வந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலம் ஜாம்நகரை சேர்ந்தவர் அல்டாப் சக்கி , அவர்வங்கி ஏ.டி.எம்.ல் ரூ.10 ஆயிரம்💰 எடுத்தார். அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. அவற்றை எண்ணி பார்த்தபோது ஒரு நோட்டில் ஒரு பக்கம் எதுவும் அச்சிடப்படாமல் இருந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே மற்ற நோட்டுகளை அவர் கவனமாக சரிபார்த்தார். அப்போது 2⃣ நோட்டுகளில் வரிசை எண் தெளிவாக இல்லை. 3⃣ நோட்டுகளில் இந்தியில் எழுதப்பட்டு இருந்த 500 ரூபாய் வார்த்தை சரியாக அச்சாகவில்லை😳. உடனே அவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று இது பற்றி முறையிட்டார். வங்கி அதிகாரிகள் அவை அனைத்தும் கள்ள நோட்டுகளா? என ஆய்வு செய்தார். அனைத்து நோட்டுகளும் நல்ல ரூபாய் நோட்டுகள் என்பதும், அச்சு குறைபாடு காரணமாக இவ்வாறு இருந்தது என்றும் தெரியவந்தது. இதையடுத்து அவர் கொடுத்த 6 நோட்டுகளை அதிகாரிகள் மாற்றி வேறு நோட்டுகளை கொடுத்தனர் 😌

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬