ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடுபவர்களின் 💰சொத்து விவரம்📜

  |   செய்திகள்

ஆர்.கே. நகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

🔰 டிடிவி தினகரன் :

அதிமுக புரட்சி தலைவி அம்மா வேட்பாளர் டிடிவி தினகரன் தனக்கு அசையும் சொத்து மதிப்பு ரூ.11 லட்சத்து 45 ஆயிரம், அசையா சொத்தின் மதிப்பு ரூ.57 லட்சம் எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மனைவி பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.7 கோடியே 18 லட்சம் எனவும், அசையா சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 40 லட்சம் எனவும், மனைவி பெயரில் ரூ.5 கோடியே 40 லட்சம் ரூபாய் வங்கி கடன் உள்ளது. தன் மீது பெரா உள்ளிட்ட 2⃣ வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

🔰 மதுசூதனன் :

அதிமுக புரட்சி தலைவி அம்மா வேட்பாளர் மதுசூதனன் தனக்கு அசையும் சொத்து மதிப்பு 18 லட்சத்தி 89 ரூபாய். அசையா சொத்தின் மதிப்பு ரூ. 1 கோடியே 37 லட்சம். மனைவி பெயரில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.51 லட்சத்து 71 ரூபாய், அசையா சொத்தின் மதிப்பு ரூ.3 கோடியே 30 லட்சம் எனவும், தன் மீது எந்த வழக்கும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

🔰 தீபா :

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா தீபா பேரவை வேட்பாளர் தீபா, அசையும் சொத்தின் மதிப்பு ரூ.1.05 கோடி எனவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.2 கோடி என தெரிவித்துள்ளார்.

🔰மருது கணேஷ் :

தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷ், தனக்கு அசையும் சொத்தின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 79 ஆயிரத்து 531 எனவும், மனைவி பெயரில் உள்ள அசையும் சொத்தின் மதிப்பு ரூ. 7 லட்சத்து 8 ஆயிரத்து 606 எனக்கூறியுள்ளார்.

🔰மதிவாணன்

தே.மு.தி.க., வேட்பாளர் மதிவாணன் தனது சொத்தின் மதிப்பு ரூ.40.69 லட்சம் எனவும்,

🔰 லோகநாதன்

மார்க்சிஸ்ட் வேட்பாளர் லோகநாதன் சொத்து மதிப்பு ரூ.6.5 லட்சம் எனவும் தெரிவித்துள்ளனர்.