சீமைக்கருவேல மரங்கள்🌳 அகற்ற ரூ. 10,000 நிதி வழங்கிய நீதிபதி😳

  |   செய்திகள்

தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை🌳 அடியோடு அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை🌳 அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பல்வேறு இடங்களில் போதுமான நிதி இல்லாததால் அந்த மரங்களை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக நீதிபதியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்⚖. இதனையடுத்து சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்கு நிதி திரட்டும் வகையில் மதுரை ஐகோர்ட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் தனி சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நீதிபதி ஏ. செல்வம் தன்னுடைய பங்களிப்பு நிதியாக ரூ. 10000 சீமைக்கருவேல மரங்கள்🌳 அகற்றும் நிதிக்காக வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். இதே போல விருப்பம் உள்ளவர்கள் தங்களால் முடிந்த தொகையை அந்த கணக்கில் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬