🍾 டாஸ்மாக் சரக்கு விலை 5% உயர்வு 😱

  |   செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விலையை 5⃣% உயர்த்த சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில வருவாயை பெருக்கும் வகையில் 🍺மது விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இன்று டாஸ்மாக் மதுபான விலையை 5⃣ % உயர்த்துவதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்திருத்த மசோதாவை பேரவையில் அமைச்சர் வீரமணி தாக்கல் செய்தார். இந்த சட்டத்திருத்த மசோதாவால் டாஸ்மாக் மதுபானங்களின்🍺 விலைகள் கடுமையாக உயரும்⬆ என தெரிகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬