தமிழகத்தில் மேலும் 3⃣ இடங்களில் ‘நீட்’ தேர்வு 👍

  |   செய்திகள்

நாடுமுழுவதும் 💉மருத்துவ படிப்புக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்காமல், CBSE பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் நீட் தேர்வின்✍ அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். இதனால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தின. இதற்கு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாடு முழுவதும் 80 நகரங்களில் மே 7-ந் தேதி நீட் தேர்வு✍ நடைபெறும் என்று CBSE கடந்த மாதம் அறிவித்தது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 5⃣ நகரங்கள் இடம் பெற்று இருந்தது. தற்போது தமிழ் நாட்டில் நெல்லை, வேலூர், நாமக்கல் ஆகிய மேலும் 3⃣ நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 123 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று அவர் அறிவித்தார். நீட் தேர்வு✍ மே 7-ந்தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மார்ச் 1-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படுமா? என்பது குறித்து தெளிவான முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬