போராட்டத்தில் ஈடுபட்ட சமகவினர் கைது ⛓

  |   செய்திகள்

🗓ஏப்ரல் 12ம் தேதி நடக்கும் தேர்தலில், சமகவின் துணைப் பொதுச்செயலாளர் அந்தோணி சேவியர் நேற்று வேட்பு மனுவை தாக்கல்செய்தார். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்ற நிலையில் அந்தோணி சேவியர், கே.விஜயன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் வேட்புமனுவை முன்மொழியாததால் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து தனது மனுவை மீண்டும் பரிசீலனை செய்யுமாறு அந்தோணி சேவியர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சமத்துவ மக்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சமகவினரை போலீசார் கைது⛓ செய்தனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியினரையும் போலீசார் கைது⛓ செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬