லண்டன் ☠ தீவிரவாத தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்பு 😳

  |   செய்திகள்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தீவிரவாதி ஒருவன் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது காரை மோதியதோடு, போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்றான். அந்த தீவிரவாதியை 👮போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் 👮போலீஸ் அதிகாரி, தீவிரவாதி உட்பட 5⃣ பேர் பலியாகினர். 40 பேர் 🏥மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக 7⃣ பேரை லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்📜 “லண்டன் பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நேற்று நடைபெற்ற தாக்குதலுக்கு, ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த வீரர் தான் காரணம்” என தெரிவித்துள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬