வேலூரில் எரிக்கல் வீழ்ந்ததா ❓

  |   செய்திகள்

மர்ம ஒளி வீழ்ந்ததில், வீட்டின் மேற்கூறை நொறுங்கி 👩பெண் பலத்த காயம்😱

வானியம்பாடியை அடுத்த துருங்கி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். வேலை விஷயமாக வெளியூர் சென்றுள்ளதால், அவரது மனைவி புவனேஷ்வரி வீட்டில் தனியாக இருந்தார். இன்று அதிகாலை 4 மணியளவில் அவரது வீட்டின் மீது இடியை விட பயங்கர சத்தத்துடன் மர்ம ஒளி ஒன்று விழுந்தது. இதில் வீட்டின் மேற்கூறை நொறுங்கியது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த புவனேஷ்வரி பலத்த தீக்காயம்🔥 அடைந்தார். சத்தம் கேட்டு அங்கு திரண்ட கிராம மக்கள் வீடு🏠 முற்றிலும் சேதமடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்😱. மேலும் பலத்த தீக்காயத்துடன் போராடிய புவனேஷ்வரியை மீட்டு மருத்துவமனையில்🏥 சேர்த்தனர். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிக்கல் போன்று இடியை போன்ற பல மடங்கு சத்தத்துடன் ஒரு ஒளி வீட்டின் மீது விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வானியர் விஞ்ஞானிகள் அங்கு ஆய்வு செய்து வருகின்றனர். சக்தி வாய்ந்த எரிகல் ஏதேனும் வீட்டின் மீது விழுந்ததா என்றும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.இதே வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எரிகல் ஒன்று விழுந்த சம்பவத்தில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2⃣ பேர் பலத்த காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬