112 ஏக்கர் நிலத்தை சசிகலா அபகரித்ததாரா😳

  |   செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள பகுதிகளில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, டி.ஜி.பி. அலுவலகத்தில் 🗓கடந்த மாதம் 9-ந்தேதி நில மோசடி புகார்போடப்பட்டது. அதில், சிறுதாவூர் பகுதியில் சசிகலா குடும்பத்தினர் வாங்கிய 112 ஏக்கர் நிலம், அங்கு நிலம் வைத்திருந்தவர்களை மிரட்டி பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு புறம்போக்கு நிலங்களும், குளம் குட்டைகளும் அதில் அடங்கியுள்ளன. மேலும் கங்கை அமரனுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தில் அவர் கட்டியிருந்த பங்களாவும்🏡 அதில் அடங்கும். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான கண்ணன் என்பவரிடமிருந்தும், நிலம் அபகற்கப்பட்டுள்ளது. இதனோடு சேர்த்து தான் 112 ஏக்கர் நிலத்தை சசிகலா தரப்பினர் அபகரித்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நில அபகரிப்பு பிரிவு 👮போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளனர். சசிகலாவுக்கு எதிரான புகார் மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் 👮போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬