இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 16½ கிலோ தங்க கட்டிகள் சிக்கியது 😱

  |   Kollywood

இலங்கையில் இருந்து 🌊கடல் வழியாக தங்க கட்டிகள் ராமநாதபுரத்துக்கு கடத்தப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக மத்திய புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வழியாக தனியார் கொரியர் நிறுவனத்துக்கு சொந்தமான மினி லாரியை, மறித்து அதிகாரிகள் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதில் 16½ கிலோ தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 5 கோடி💰 ஆகும். உடனே தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டு, வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை சேர்ந்த சந்தோஷ் என்பதும், இந்த தங்க கட்டிகளை சென்னைக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. கடத்தல் தங்கம் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என 👮போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬