டி.வேல்முருகன் மீது 💸லைகா நிறுவனம்📜அவதூறு வழக்கு😱

  |   Kollywood

முன்னணி தயாரிப்பு நிறுவனமான💸'லைகா' நிறுவனத்தின் பிரதிநிதி A.R.M அருணாசலம், தமிழக உரிமை கட்சியின் தலைவர் டி.வேல்முருகன் மீது அவதூறு வழக்கு📜பதிவு செய்துள்ளார். கடந்த மார்ச்.25ந் தேதி தொலைக்காட்சி📺செய்தி சேனல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய🎙டி.வேல்முருகன் லைகா💸நிறுவனத்தை பற்றி அவதூறாக பேசியுள்ளார்😳.அந்த விவாதத்தில் அவர் லைகா நிறுவனத்தை முற்றிலும் பாதிக்கும் வகையில் தவறான கருத்துக்களை பதிவு செய்தார்😯.லைகா நிறுவனத்திற்கும் இலங்கை ஜனாதிபதி ராஜபஷே.விற்கும் இடையே பிணைப்பு இருப்பதாகவும்😯,மற்றும் அந்த நிறுவனம் தற்போது இலங்கை தமிழர்களுக்கு இலவசமாக வழங்கவிருக்கும்🏘வீடு அனைத்தும் தவறான வழியில் வந்த பணத்தில் கட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்😱.மேலும், அவர் மீது லைகா நிறுவனம் தொடர்ந்த அவதூறு 📜வழக்கில் அவர்கள் கூறியிருப்பதாவது, " எங்கள் நிறுவனம்🏘வீடுகளை இழந்து தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு உதவுவது மட்டுமே👍.இலங்கை அரசுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு தவறான உறவும் இல்லை👍.ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொள்ளவிருந்தது கூட அந்த மக்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவிப்பதற்கே தவிர வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை😳.ஏற்கனவே, இவர்களது அரசியல் தலையீட்டால் விஜய் நடித்த🎥'கத்தி'படம் வெளிவருவதில் பல பிரெச்சனைகளை சந்தித்தது."என்று கூறப்பட்டிருந்தது. மேலும், "இவ்வாறு ஒரு பொது ஊடகத்தில் எங்கள் நிறுவனத்தை பற்றி அவதூறாக பேசியதற்கு 24 மணிநேரத்திற்குள், ஊடங்கங்களில் மன்னிப்பு🙏கோர வேண்டும் எனவும், நஷ்டஈடாக💸ரூ.10 கோடி அளிக்கவேண்டும்" எனவும் குறிப்பிட்டிருந்தது😱.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬