பொதுமக்களிடம் ஆதரவு கோரும் விவசாயிகள் 😟

  |   செய்திகள்

வறுமையால் தற்கொலை செய்த விவசாயிகளின் மண்டை ஓட்டை 💀 கழுத்தில் மாட்டியும், கையில் திருவோடு ஏந்தியும், அரை நிர்வாணமாக டெல்லியில் போராட்டம் நடத்துகின்றனர் நம் தமிழக விவசாயிகள். போராட்டத்தை கைவிட கோரி பல அமைச்சர்கள் வற்புறுத்தினர். ஆதரவு கரம் நீட்டுவதாக தெரிவித்தனர். ஆனால், நம் விவசாயிகளுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை😲.

🔹வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், 🔹காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும், 🔹விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 14 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வருகின்றனர்✊. இவர்களுக்கு உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் பகுதியை சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மற்ற விவசாயிகள், மாணவ அமைப்பினர், இளைஞர்கள் அவர்கள் இருக்கும் பகுதியிலேயே போராட்டம் நடத்தி டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬