எம்எல்ஏ கருணாஸ் அதிரடியாக, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் 😳

  |   செய்திகள்

✍துளிர் 🍁

அதிமுக சசிகலா அணியை சேர்ந்த எம்எல்ஏ கருணாஸ், 'முக்குலத்தோர் புலிப்படை' கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவராக இருந்தவர், ⭐ கருணாஸ். இவர், 🗓கடந்த 24-ம் தேதி முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் அனைத்து புதிய நிர்வாகிகளையும் நீக்கினார்😳. மேலும், "நிர்வாகிகளாக இருந்தவர்கள், அதிகாரப்பூர்வ அனுமதிக் கடிதம்✍ இன்றிச் செயல்பட்டவர்கள் என்றும், மாவட்ட, ஒன்றிய, நகர புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்" என்றும் கூறியிருந்தார்😯. இந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் இருந்து ⭐கருணாஸை நீக்கியுள்ளதாக, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பாண்டித்துரை அறிவித்துள்ளார்😳. இது குறித்து ⭐கருணாஸ் கூறுகையில் 🔈, "கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. மாநில நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்ட பிறகு, எவ்வாறு என்னை நீக்க முடியும்" என்று கேள்வி எழுப்பினார்😕.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬