ஐ.நா.வின் 💣அணுஆயுதத் தடை✋ மாநாட்டில் 🇮🇳இந்தியா இல்லையா 😳

  |   செய்திகள்

பல ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தையிலே இருக்கும் சர்வதேச 💣அணுஆயுதத் தடை குறித்து நடக்கவிருக்கும் மாநாட்டில் 🇮🇳இந்தியா பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு ஐ.நா. நடத்திய 'அணுஆயுதத் தடை' வாக்கெடுப்பு மாநாட்டில் 120 நாடுகள் பங்கேற்று வாக்களித்தன. இதில் ஒட்டுமொத்தமாக அணுஆயுதத் தடை செய்வதற்கு மறுப்பு தெரிவித்து 🇺🇸அமெரிக்கா, 🇬🇧பிரிட்டன், 🇫🇷பிரான்ஸ், 🇷🇺ரஷ்யா ஆகிய நாடுகள் வாக்களித்தன. அப்போது 🇨🇳சீனா, 🇵🇰பாகிஸ்தான், 🇮🇳இந்தியா ஆகிய நாடுகள் வாக்களிப்பதிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தது. அணுஆயுதப் பரவலைத் தடுக்கத் தடை என்பதை 🇮🇳இந்தியா ஆதரிக்கிறது என்றபோதிலும் இதுகுறித்த தடை மட்டுமல்லாது தீவிர ஆய்வும் நடத்தப்பட வேண்டுமென இந்தியா தெரிவித்துள்ளது. சர்வதேச ஆய்வு தேவைப்படும் 'அணு ஆயுதத் தடையில் ஆய்வு' அவசியம் என்பதால், 🇮🇳இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மார்ச் 31 அன்று நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை மாநாட்டில் இந்தியா பங்கேற்கபோவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬