ஜிஎஸ்டி மசோதாக்கள் தாக்கல் ; ஜூலை 1-க்குள் அமல்படுத்தபடும் 😳

  |   செய்திகள்

சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) தொடர்பான 4⃣ இணைப்பு மசோதாக்களை மத்திய அரசு நேற்று மக்களவையில் தாக்கல் செய்தது. ஒரே நாடு, ஒரே வரி திட்டம் என்பதை அமல்படுத்தும் வகை யில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று மத்திய ஜிஎஸ்டி(central-GST), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி(Integrated GST), யூனியன் பிரதேச ஜிஎஸ்டி(Union territory GST) மற்றும் இழப்பீடு சட்டம் ஆகிய 4⃣ மசோதாக்களை மக்களவையில் அறிமுகம் செய்தார். முன்னரே இதுகுறித்து தெரிவிக்காததற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆட்சேபத்தை ஏற்காத சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘‘சனிக்கிழமை காலையிலேயே மசோதாக்கள் எம்.பி.க் களின் பார்வைக்கு அனுப்பி வைக் கப்பட்டது’’ என்றார். இதனால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது. இம்மசோதாக்கள் மீது இன்று விவாதம் நடக்கிறது. ஜிஎஸ்டி மசோதாவை வரும் 🗓ஜூலை 1-ம் தேதி நாடு முழு வதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது 😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬