தனுஷின்📜வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு😟

  |   Kollywood

மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் கோர்ட்டில், தனுஷ் தங்களது 👦மகன் என்றும் பள்ளியில் படித்து கொண்டிருக்கையில் திடீரென மாயமாகி விட்டதாகவும் கூறி📜மனு ஒன்றை தாக்கல் செய்தனர்😳.மேலும், தங்களது மகனான👦தனுஷ் இவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு தொகையாக ரூ.65 ஆயிரம்💸வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள்😯.இந்த வழக்கு மேலூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது😳.இதனையடுத்து, அவர்கள் சொல்வது அனைத்தும் பொய். எனவே அந்த வழக்கை ரத்து செய்வதுடன், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும்👍என்று நடிகர் தனுஷ் சார்பில் மதுரை🏛ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது😯.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்🏛இருதரப்பினரையும் பள்ளி மாற்றுச்சான்றிதழை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது⚖.இதனை அடுத்து தனுஷ் அளித்த சான்றிதழ்களில்📄அவரது அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை,என்பதால் கடந்த 28ந் தேதி தனுஷின் அங்க அடையாளங்களை மருத்துவ🏥குழு நேரடியாகவே பரிசோதித்து அந்த தகவலையும் நீதிமன்றத்தில்🏛ஒப்படைத்தது. இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி பி.என்.பிரகாஷ், கோர்ட்டு உத்தரவுகளை முறையான ஆவணங்கள்📄பெற்று வெளியிடலாம் என்று கூறி இந்த வழக்கின் இறுதி விசாரணையை அடுத்த மாதம் 11ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬