🐂பசுவதை தட்டுப்பாடு விதித்த உ.பி. முதல்வரின் முதல் உத்தரவுக்கு 🏴போர்க்கொடி👍

  |   செய்திகள்

யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேச முதல்வராக பதவியேற்ற ஒரே வாரத்தில், அமைச்சரவையைக் கூட்டாமலேயே, 50 உத்தரவுகளை அதிரடியாகப் பிறப்பித்தார். அதில் முக்கிய உத்தரவுகள் சில :

🔰 சட்டவிரோதமாக பசுவதை செய்யும் கூடங்களை மூட வேண்டும், பசு கடத்தல் தடுப்பு.
🔰 பள்ளி- கல்லூரி முன்பு நின்று பெண்களைக் கேலி செய்வோரைப் பிடிக்க தனிப்படை அமைப்பு.
🔰 அரசு அலுவலகங்களில் குட்கா மற்றும் பான் மசாலா பயன்படுத்தத் தடை.
🔰 ஜூன் 15-ம் தேதிக்குள், அனைத்து சாலைகளையும் குண்டுகுழிகள் இல்லாமல் சீர்செய்ய வேண்டும்.
🔰 ஆசிரியர்கள், பள்ளிக்கு டி-சர்ட் அணிந்து வரக்கூடாது.
🔰 ஆசிரியர்கள், பள்ளியில் தேவையில்லாமல் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது.
🔰 அரசு அலுவலங்களில் பணிப்புரிவோர், ஆவணங்களை வீட்டுக்கு எடுத்துப் போகக்கூடாது.

இதில் பசுவதை தடுப்பு உத்தரவுக்கு, மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது 😱. இதனை எதிர்த்து, இறைச்சிக் கடைக்காரர்கள் மற்றும் 🐟மீன் வியாபாரிகள் காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் "முதல்வரின் உத்தரவு, சட்ட விரோதமாக இறைச்சிக் கடை நடத்துவோரைத்தான் பாதிக்கும், நேர்மையாக இருப்பவர்கள் அதுபற்றிக் கவலைப்பட தேவையில்லை" என்றும் பாஜாக தலைவர் மஸார் அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬