பல்கலைகழக துணைவேந்தரை👔 மதிப்பெண் தீர்மானிக்கும் 👍

  |   செய்திகள்

தகுதியில்லாதவர்கள், பல்கலைகளின் உயர் பதவிக்கு வருவதை தடுக்கும் விதத்தில், பல்கலைகளின் துணை வேந்தர்👔 பதவிக்காக, பேராசிரியர்களுக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்📃 வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னை, மதுரை மற்றும் அண்ணா பல்கலைகளில், துணை வேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. இதில், தகுதியானவர்களை நியமிக்க, தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டன. சென்னை பல்கலைக்கு, இறுதி பட்டியல்📜 தயார் செய்யப்பட்டு, கவர்னரிடம் வழங்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தர்👔 தேர்வுக்கான, இறுதி பட்டியல்📜 தயார் செய்யப்படுகிறது.

வெயிட்டேஜ் மதிப்பெண்📃 என்பது, விண்ணப்பதாரர்களின் ஆராய்ச்சி, பல்கலை மானியக் குழுவின் ஆராய்ச்சி நிதியை சரியாக பயன்படுத்தியது, அதிக அளவு ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கியது என, 14 வகை அம்சங்களுக்கு தரப்படுகிறது. பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின்படி, அதிக மதிப்பெண் 📃பெறுவோருக்கே, துணை வேந்தர்👔 பதவி வழங்கப்பட வேண்டும்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬