தமிழக முதல்வர் தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு 😳

  |   செய்திகள்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 5⃣ அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரிசங்கர், கடந்த 🗓பிப். 22ல் அளித்த பேட்டியில், 'சசிகலாவின் ஆலோசனைப்படியும், உத்தரவின்பேரிலும்தான் தமிழக அரசு வழி நடத்தப்படும்' என்றார். பின், 🗓 பிப். 28ல் இதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் சசிகலாவை சிறைக்கு சென்று பார்த்துள்ளனர்😳. இந்த செயல் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் இந்த செயலானது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் உள்ளது. இதற்காக முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவர்களது எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்ய வேண்டுமென தமிழக சபாநாயகர் மற்றும் சட்ட பேரவை செயலாளர் ஆகியோருக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனியின் மகன் ஆணழகன் மனு📜 தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்ற முடிவினை அறிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை 🗓ஏப்ரல் 11-ம் தேதிக்கு இந்த வழக்கினை ஒத்திவைத்துள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬