2016ல் வாங்கிய விளைநிலங்களை பத்திர பதிவு📃 செய்யலாமா⁉

  |   செய்திகள்

விளைநிலங்களை வீட்டு மனைகளாக பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்ட உத்தரவில், உயர்நீதிமன்றம் மாற்றம் செய்துள்ளது. அதாவது கடந்த 🗓 20.10.2016 தேதிக்கு முன் பத்திரப்பதிவு செய்த மனைகளுக்கு உயர்நீதிமன்றத்தின்⚖ தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விளை நிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்யும்போது, அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று பத்திரப்பதிவுத்துறைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு🗓 21.10.2016ந் தேதி விசாரணைக்கு வந்தபோது ஒரு அரசாணையை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்படுகிறது. அதேநேரம், இந்த அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு, அதாவது அக்டோபர் 20–ந் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட மனைகளை, மறு பத்திரப்பதிவு செய்ய விலக்கு அளிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டிருந்தது😔. இந்நிலையில், 🗓20.10.2016 தேதிக்கு முன் பத்திரப்பதிவு செய்த மனைகளுக்கு உயர்நீதிமன்றத்தின் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மாற்றப்பட்டுள்ளது😌.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬