அட்லீ🎬இயக்கத்தில் பிரபாஸ்😱

  |   Kollywood

✍இளவேனில்🌄

'பாகுபலி-2' 🎥படத்தின் ரிலீஸ் வரும் ஏப்ரல்28ந் தேதி உலகம்🌎முழுவதும் வெளியிடப்படவுள்ளது. இப்படத்தின் வசூல் 1000 கோடியை 💸நெருங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பிரபாஸின் மார்க்கெட் தற்போதே அதிகரித்து விட்டது👍.5⃣ஆண்டுகளை பாகுபலி பாகங்களில் செலவிட்ட பிரபாஸ் தற்போது வருடத்திற்கு 2⃣படங்கள் நடிப்பேன் என்று தனது ரசிகர்களுக்கு வாக்களித்துள்ளார்👍.அதன்படி, சுஜித்🎬இயக்கத்தில் ஒரு தெலுங்கு படத்தில் பிரபாஸ் 🎥நடிக்கவுள்ளார்.தெலுங்கில் அவர் நடிக்கவிருக்கும் அதே கதையை 🎬அட்லீயிடம் கூறி தமிழில் இயக்குமாறு பிரபாஸ் கேட்டுக்கொண்டதை அடுத்து அட்லீயும் அதற்கு🆗ஒப்பு கொண்டாராம். இதனால் தான் எந்த தெலுங்கு பட விழாக்களிலும் கலந்து கொள்ளாத 🎬அட்லீ சமீபத்தில் நடந்த 'பாகுபலி-2' படத்தின்🎥விழாவில் கலந்து கொண்டதாக தெரிகிறது😯.மேலும், தற்போது விஜய் படத்தை இயக்கும் 🎬அட்லீ, அந்த படத்தை முடித்த பின் பிரபாஸ்🎥படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்க படுகிறது😳.இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது🙂.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬