குடியரசுத் தலைவரை சந்தித்த 🌿🌾விவசாயிகள்; தீர்வு கிடைக்குமா ❓ 😔

  |   செய்திகள்

✍துளிர் 🍁

🔹காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், 🔹வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், 🔹விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், 🔹நதிகள் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 15வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், பல அரசியல் பிரமுகர்களும் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்🤝. இந்நிலையில் டெல்லியில், தமிழக விவசாயிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று மாலை சந்தித்தனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன், தமிழக விவசாய பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர். அப்போது விவசாயிகளின் கோரிக்கை மனுவை குடியரசு தலைவரிடம் அவர்கள் அளித்தனர்👍. முன்னதாக விவசாய குழு பிரதிநிதிகள் இன்று, திமுக எம்.பி திருச்சி சிவாவுடன் இணைந்து அருண் ஜேட்லியை சந்தித்தனர்👍.

பல தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், நம் விசாயிகளை காப்பாற்ற, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு காலம் தாமதிக்காமல் நல்ல முடிவினை எடுத்தே தீர வேண்டும்😐.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬